பாஜக தலைவர்களையும், தொண்டர்களையும், பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரையும் அவர் சந்திக்கவுள்ளார். இதுகுறித்து பாஜக வெளியிட்ட அறிக்கையில், பாஜக தலைவர் ஜேபி நட்டா செவ்வாய்க்கிழமையும், புதன்கிழமையும் இங்கு வருகை தர இருக்கிறார். நேற்று (மே 3) தேதி அவர் வன்முறையில் ஈடுபட்ட விவகாரம் குறித்து விரிவாக ஆய்வு செய்யவுள்ளார். திரிணாமூல் காங்கிரசார் வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்தி வருகின்றனர். இதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது’’ என்றார்.
இதற்கிடையே, திரிணாமூல் காங்கிரஸின் வன்முறையைக் கண்டித்து மே 5ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தை நடத்த பாஜக அழைப்பு விடுத்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் கரோனா விதிமுறையைப் பின்பற்றி அமைதியான முறையில் போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.