ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ஜாவேத் அகமது தார், இன்று பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஜாவேத் அகமது தார், பிரசூலு ஜாகீர் பகுதியில் உள்ள தனது இல்லத்தின் அருகே இருந்தபோது, பயங்கரவாத கும்பல் அவரை துப்பாக்கியால் சுட்டது. இதில் ஜாவேத் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார்.
இவரின் படுகொலைக்கு பாஜக மாநில பொதுச்செயலாளர் அசோக் கோல் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
கண்டனம் தெரிவித்த மெகபூபா முப்தி
அத்துடன் பிடிபி கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான மெகபூபா முப்தியும் இந்த படுகொலைக்கு தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நபர்களைத் தேடும் பணியில் ஜம்மு காஷ்மீர் காவல்துறை களமிறங்கியுள்ளது. ஆகஸ்ட் 9ஆம் தேதி, குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் குலாம் ரசூல் தாரும், அவரது மனைவியும் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பெகாசஸ் விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சம்மன்!