புவனேஸ்வர்:கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில், பறவைக் காய்ச்சல் பரவல் இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, அம்மாநிலங்களில் வைரஸ் பரவல் உறுதி செய்யப்பட்ட பகுதிகளிலுள்ள பறவைகளை அழிப்பதற்கான பணிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் ஒடிசா மாநிலம் கோர்த்தா மாவட்டத்தையடுத்த பதபேரனா கிராமத்திலுள்ள கோழிப்பண்ணையில் நேற்று 700க்கும் மேற்பட்ட கோழிகள் திடீரென உயிரிழந்துள்ளதாக, அக்கிராம அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பறவைக் காய்ச்சல் காரணமாக கோழிகள் உயிரிழந்னவா என்பது குறித்து ஆய்விற்கு பின்னரே தெரியவரும் எனவும் கூறியுள்ளனர். தற்போதுவரை மருத்துவர்கள் ஆய்வு செய்ய வரவில்லை என அக்கோழி பண்ணை உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.