விளையாட்டு வீரர்கள் வாழ்க்கை வரலாற்றை திரைப்பட இயர்குநர்கள் படமாக எடுக்க மும்முரம் காட்டிவருகின்றனர். அதனடிப்படையில், கிரிக்கெட் பிரபலங்கள் சச்சின் டெண்டுல்கர், தோனி, கபில் தேவ் உள்ளிட்ட பலரின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன.
விஸ்வநாதன் ஆனந்த் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கும் பிரபல இயக்குநர்! - விஸ்வநாதன் ஆனந்த் வாழ்க்கை வரலாறு
ஹைதராபாத்: சதுரங்க ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்க உள்ளார்.
biopic-on-chess-legend-viswanathan-anand-in-the-offing
அந்த வரிசையில், சதுரங்க ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த்தின் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது. இப்படத்தை பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆனந்த் எல் ராய் இயக்கவுள்ளார். இவர் தனுஷ் நடிப்பில் இந்தியில் வெளியான ராஞ்சனா படத்தை இயக்கியவர். இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. நடிகை, நடிகர்கள் தேர்வு விரைவில் நடைபெற இருக்கிறது.
இதையும் படிங்க:இளைஞர்களுக்காக செஸ் அகாடமி தொடங்கிய ஆனந்த்!