தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குஜராத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதற்கு ராகுல்காந்தி கடும்கண்டனம்! - ராகுல்காந்தி கண்டனம்

இஸ்லாமியப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 11 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Rahul
Rahul

By

Published : Aug 17, 2022, 3:57 PM IST

டெல்லி: குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த கோத்ரா கலவரத்தின்போது, 20 வயது இஸ்லாமியப் பெண்மணி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் இருந்த அவர்களை, கருணை அடிப்படையில் குஜராத் அரசு விடுவித்தது. இவர்கள் 11 பேரும் சுதந்திர தினத்தன்று(ஆக.15) விடுதலையாகினர். குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பலர் இன்னும் சிறையில் இருக்கும் நிலையில், இஸ்லாமியப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. குஜராத் அரசின் இந்த நடவடிக்கைக்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், இஸ்லாமியப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "5 மாத கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்து, 3 வயது சிறுமியை கொலை செய்தவர்கள் சுதந்திர தினத்தன்று விடுவிக்கப்பட்டனர். பெண் சக்தி குறித்து பொய்யுரைத்து வருபவர்கள், இந்த சம்பவத்தின் மூலம் நாட்டில் உள்ள பெண்களுக்கு என்ன செய்தி கொடுக்கிறார்கள்? பிரதமர் அவர்களே, உங்களது சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்தை முழு நாடும் பார்க்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நாங்கள் அனைவரும் அரசியலால் பாதிக்கப்பட்டவர்கள்.. பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளி


ABOUT THE AUTHOR

...view details