பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று திரும்பிக்கொண்டிருந்த அமித் ஷா கான்வாயைத் தொடர்ந்து 300 மீட்டருக்கு இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த இரு இளைஞர்களை பெங்களூரு போலீஸார் கைது செய்துள்ளனர்.
பெங்களூருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா நிகழ்ச்சி முடிந்து, இரவு சுமார் 11 மணி அளவில் ''தாஜ் வெஸ்ட் என்ட்'' ஹோட்டலில் இருந்து HAL விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத இரு இளைஞர்கள் தொடர்ந்து 300 மீட்டர் தூரத்திற்கு அவரது கான்வாயை பின்பற்றி வந்துள்ளனர்.
அவ்விரு இளைஞர்களும் மணிப்பால் மையப்பகுதி வரை, அமித் ஷாவின் கான்வாயைப் பின்பற்றி வந்துள்ளனர். மணிப்பால் மையப்பகுதியில் அவ்விரு இளைஞர்களையும் காவல் பணியில் இருந்த காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து அவ்விரு இளைஞர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ், அரசு அதிகாரி வேலை செய்யும் போது இடையூறு விளைவித்தல் என்னும் 353ஆவது பிரிவின் கீழும் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல் என்ற 279ஆவது பிரிவின்படியும் அந்த இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் மாநிலத்தின் முதலமைச்சர் பஷவராஜ் பொம்மை, முன்னாள் முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா, தேசிய பாஜக பொதுச்செயலாளர் பி.எல்.ஷந்தோஷ் மற்றும் மூத்த பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் எனப் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இது போன்று, இந்த மாதம் அஹார்த்தலாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது இதே போல் அடையாளம் தெரியாத நபர்கள் நிகழ்ச்சி முடிந்த பின்பு உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கான்வாயை பின்தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:விரைவில் உள்ளிருப்புப் போராட்டம் - காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை பேட்டி