தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிகார் வெற்றி மக்கள் தீர்மானித்தது - நிதிஷ் குமார் - பாஜக கூட்டணி

பாட்னா: பிகார் தேர்தலின் வெற்றி மக்கள் தீர்மானித்தது என்றும், தேசிய ஜனநாயக கூட்டணியை பெரும்பான்மையுடன் வெற்றிபெறச் செய்த மக்களை தலைவணங்குகிறேன் என்ற பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பிகார் வெற்றி மக்கள் தீர்மானித்தது- நிதிஷ் குமார்!
பிகார் வெற்றி மக்கள் தீர்மானித்தது- நிதிஷ் குமார்!

By

Published : Nov 11, 2020, 8:38 PM IST

பிகாரில் மொத்தமுள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. பிகார் மாநிலத்தின் 38 மாவட்டங்களில் உள்ள 55 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் நவம்பர் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

மொத்தம் 243 தொகுதிகள் உள்ள நிலையில், பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 122 இடங்களில் வெற்றிபெற வேண்டும். வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன் ஆர்ஜேடி கூட்டணி முன்னணியில் இருந்தபோதிலும், முடிவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயாக கூட்டணி 125 இடங்களில் வெற்றிபெற்று, ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற்றுள்ளது.

இந்நிலையில், பிகார் தேர்தல் வெற்றி தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிகார் முதலமைச்சரும், ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் ட்வீட் செய்துள்ளார்.

அதில், “பிகார் தேர்தலின் வெற்றியை மக்கள் தீர்மானித்தார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியை பெரும்பான்மையுடன் வெற்றிபெறச் செய்த மக்களை தலைவணங்குகிறேன். வெற்றிபெற உறுதுணையாக இருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details