பாட்னா:பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் பிர்பைண்டியை சேர்ந்தவர் நீலம் தேவி(42). இவர் நேற்று (டிசம்பர் 3) வீட்டின் அருகில் உள்ள சந்தைக்கு சென்றுவிட்டு மாலை 6.30 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, 2 பேரால் தாக்கப்பட்டார். இவரது கை, கால்கள், மார்பகங்கள் துண்டிக்கப்பட்டன. இவரை மீட்ட உள்ளூர் மக்கள் பிர்பைண்டி மருத்துவமனையில் அனுமதித்தனர். இவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதைக் கண்ட மருத்துவர்கள், மாயாகஞ்சில் உள்ள பண்டிட் ஜவஹர்லால் நேரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், செல்லும் வழியிலேயே நீலம் உயிரிழந்தார். இதனிடையே தகவலறிந்த போலீசார், நீலம் தேவியின் உடலைக்கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக போலீசார் தரப்பில், நீலம் தேவி தனது மகளின் திருமணத்துக்காக ஷகீல் என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார்.