பாட்னா: பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள முரார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில், கடந்த 16ஆம் தேதி சிறுமி ஒருவர் நோட்டு புத்தகங்களை வாங்குவதற்காக கடைவீதிக்கு சென்றார். அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அந்த சிறுமியை கடத்திச் சென்றனர்.
அந்த சிறுமியை பாட்னாவுக்கு அழைத்துச் சென்று, ஒரு அறையில் அடைத்து வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமியை தேடி அலைந்த பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர். இதனிடையே நான்கு நாள்கள் கழித்து, கடந்த ஆக. 20ஆம் தேதி சிறுமியை பக்சர் மாவட்டத்தில் உள்ள தும்ரான் ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு அந்த கும்பல் தப்பியோடிவிட்டது. பிறகு சிறுமி தானாக அவரின் வீட்டிற்கு வந்தடைந்தார்.