பாட்னா: பிகார் மாநிலத்தில்100 கி.மீ. தூரம் சுரங்கப்பாதை அமைத்து ரயில் இன்ஜினை சிலர் திருடியதாக செய்திகள் வெளியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு கிழக்கு மத்திய ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கிழக்கு மத்திய ரயில்வே தரப்பில், பிகாரின் பரௌனி யார்டில் இருந்த ரயில்வே என்ஜின் முசாபர்பூரிலிருந்து பராவ்னி வரை சுமார் 100 கி.மீ தூரம் சுரங்கப்பாதை அமைத்து சிலரால் திருடப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் பரௌனி அருகே உள்ள கர்ஹாரா ரயில்வே யார்டில் பழுதடைந்து கிடக்கும் இன்ஜினில் சிலர் செம்பு கம்பிகள் மற்றும் அலுமினியப் பாகங்களைத் திருடி, பிகாரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பழைய பொருட்களை வாங்கும் இடத்தில் விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.
100 கி.மீ. தூரம் சுரங்கப்பதை அமைத்து ரயில் என்ஜின் திருட்டு..? கிழக்கு மத்திய ரயில்வே விளக்கம்..! - என்ஜின் திருட்டு
பிகார் மாநிலத்தில் சுரங்கப்பாதை அமைத்து ரயில் இன்ஜினை திருடப்பட்டதாக வெளியாகிய செய்தி குறித்து கிழக்கு மத்திய ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
இந்தக் கும்பலின் தலைவன் சந்தன் குமாரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், பிரபாத் நகர் காலனியைச் சேர்ந்த மனோகர் லால் சாஹ் என்பவரின் ஸ்கிராப் குடோனில் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்து திருடப்பட்ட 13 என்ஜின் பாகங்கள் மீட்கப்பட்டன. இதன் மதிப்பு 30 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும். ஆகவே திருடர்கள் என்ஜின் உள்ளே புகுந்து கேபிள்களை மட்டுமே திருடிச் சென்றனர். மொத்த பெட்டியும் திருடப்பட்டதாக வெளியாகும் செய்தி உண்மையல்ல" எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:கண்டெய்னரில் குங்குமப்பூ சாகுபடி! கலக்கும் புனே இளைஞர்..