பிகாரில் பாஜக ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சி செய்து வந்தது. இந்நிலையில் அக்கட்சி கூட்டணியின் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கும் பாஜக மேலிடத்திற்கும் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ராஜினாமா செய்துள்ளார்.
ராஜினாமா கடிதத்தை இன்று மாலை 4 மணி அளவில், ஆளுநர் பாகு சவுகானிடம் ராஜ்பவனில் சமர்ப்பித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் அக்கட்சியின் அனைத்து தலைவர்களும் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று விரும்பினர். ஏற்கெனவே ஒருமித்த கருத்து ஏற்பட்டதால், அதற்கு சம்மதித்து, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்," என்றார்.
இதனிடையே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார், எதிர்க்கட்சித்தலைவரான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் இளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் உடன் மீண்டும் ஆட்சி அமைக்க உரிமைகோரியுள்ளார்.
இதையும் படிங்க:பதவியை பத்திரத்தில் எழுதிக் கொடுத்த பஞ்சாயத்து தலைவர்