தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிகார் தேர்தல்: இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு! - இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு

பாட்னா: பிகாரில் உள்ள 94 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.

பிகார்
பிகார்

By

Published : Nov 3, 2020, 10:48 AM IST

பிகார் சட்டப்பேரவை தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 28ஆம் தேதி 71 தொகுதிகளுக்கு நடைபெற்றது. இந்நிலையில், 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவருகிறது. ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ், அவரின் சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ், நான்கு மாநில அமைச்சர்கள் உள்பட 1,464 வேட்பாளர்கள் இன்று களத்தில் உள்ளனர்.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு

முதலமைச்சர் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி, மத்திய இணையமைச்சர் நித்தியானந்த் ராய், லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பாஸ்வான் ஆகியோர் தங்களின் ஜனநாயக கடமையை இன்று நிறைவேற்றினர். காலை 9 மணி நிலவரப்படி 9.27 வாக்குகள் பதிவாகியுள்ளன. பக்தியார்பூரில் 14.46 வாக்குகளும் திக்காவில் 7.65 வாக்குகளும் பதிவாகியுள்ளன. ஜனநாயகத்தை வலுப்படுத்த மக்கள் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு

பாஜக, ஐக்கிய ஜனதா தள கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அதேபோல், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் மெகா கூட்டணியாக உருவெடுத்து களம் காண்கின்றன.

ABOUT THE AUTHOR

...view details