பிகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுனில் சிங். இவருக்குச் சொந்தமாக நிலம் இருந்தாலும், அதில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வருவாய் எதுவும் வரவில்லை.
எனவே, குஜராத் மாநிலத்தில் உள்ள விசைத்தறி நிலையத்தில் தினக்கூலியாக பணிபுரிந்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும், சுனில் சிங்கின் மகன் ராகுல் சிங் நன்றாகப் படித்து ரூர்கேவில் உள்ள ஐஐடியில் சேர்ந்தார்.