நவாடா: பீகார் மாநிலம் கொனாவா கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகின்றன. அவருக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சமீபத்தில் அவருக்கு அரசு வேலை கிடைத்து உள்ளது. அரசாங்க வேலை கிடைத்த நிலையில், அவரது நடவடிக்கைகளிலும் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படத் துவங்கின. இந்த மாற்றங்களின் உச்சக்கட்ட அதிர்ச்சியாக, கட்டின மனைவி மற்றும் பெற்ற பிள்ளைகளையே, வீட்டை விட்டு விரட்டிய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் கூறியதாவது, திருமணமாகி 14 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது கணவருக்கு அரசு வேலை கிடைத்தது. இந்நிலையில், தன்னையும், தனது இரண்டு குழந்தைகளை வீட்டில் இருந்து வெளியேற்றி விட்டார். நான், குழந்தைகளுடன் வீட்டின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டேன். இந்த விவகாரத்தில், தீர்வு ஏற்படுத்த காவல்துறையினர் முயன்ற போதும், அவர் வீட்டின் கதவை திறக்க மறுத்து விட்டதாக குறிப்பிட்டு உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது, நான், தனது மாமியார் வீட்டின் முன் தனது இரண்டு குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டேன். ஆனால், எனது கணவர் மற்றும் மாமியார் வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை திறக்க முயன்றும் எவ்வித பலனும் கிட்டவில்லை. இதனை அடுத்து, இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, போலீசார் உடன் காவல் நிலையத்திற்கு சென்று விட்டதாக, குறிப்பிட்டு உள்ளார்.