தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எம்எல்ஏ மகன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் காயம்! - Bihar news

பிகாரில் நிலம் கையகப்படுத்துதலில் ஏற்பட்ட தகராறில், ஜேடியூ எம்எல்ஏ மகன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

பிகார் ஜேடியூ எம்எல்ஏ மகன் நடத்திய துப்பாக்கிச்சூடு - நான்கு பேர் காயம்!
பிகார் ஜேடியூ எம்எல்ஏ மகன் நடத்திய துப்பாக்கிச்சூடு - நான்கு பேர் காயம்!

By

Published : Dec 13, 2022, 11:31 AM IST

பாகல்பூர்:பிகார் மாநிலத்தின் பாகல்பூரில் உள்ள ஹவுசிங்போர்டு காலனியில் மண்டல் என்ற பகுதி உள்ளது. இங்குள்ள சில நிலங்களை ஜேடியூ எம்எல்ஏ கோபால் மண்டல் வலுக்கட்டாயமாக கையகப்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நிலம் தொடர்பாக நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த ஜேடியூ எம்எல்ஏ மகன் ஆஷிஷ் குமார் என்பவர் 25 பேருடன் வந்துள்ளார்.

அப்போது ஏற்பட்ட தகராறில் ஆஷிஷ் குமார், துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் ஒரு பெண் உள்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர். பின்னர் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்ட நால்வரும், பாட்னா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து ஜேடியூ எம்எல்ஏ கோபால் மண்டலிடம் ஈடிவி பாரத் செய்திகள் தொடர்பு கொண்டபோது, “இந்த சம்பவத்தில் எனது மகனுக்கு தொடர்பு இல்லை” என கூறினார். அதேநேரம் துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளான ரவி கூறுகையில், "எம்எல்ஏ கோபால் மண்டல் எனது நிலத்தை கையகப்படுத்த விரும்பினார்.

அவர் என்னை தொலைபேசியில் மிரட்டினார். இந்த நிலையில் இன்று காலை சுமார் 20 முதல் 25 பேர் வந்து எங்களைத் தாக்கினர். பின்னர் அவரது மகன் எங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்" என்றார். தொடர்ந்து இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:பிகாரில் 5 டிரான்ஸ்பார்மர்கள் திருட்டு.. 5 கிராமங்கள் இருளில் மூழ்கியது!

ABOUT THE AUTHOR

...view details