மேற்கு சம்பரன்:பிகாரில், மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள சன்கி கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், ஷிகர்பூர் காவல் நிலையத்திற்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து, தான் ஒரு பத்திரிகையாளர் என்றும், தற்போது தான் மது குடித்துக் கொண்டிருப்பதாகவும், முடிந்தால் போலீசார் தன்னை பிடிக்கலாம் என்றும் சவால்விடும் வகையில் பேசியுள்ளார்.
போலீசார் முதல் முறை இந்த தொலைபேசி அழைப்பை கண்டுகொள்ளவில்லை. ஆனால், அந்த நபர் தொடர்ந்து காவல்நிலையத்திற்கு அழைத்து சவால் விட்டு, காவல்துறையினரிடமே வம்பிழுத்துள்ளார்.
இதனால், காவல்துறையினர் அவரது வீட்டிற்கு நேரில் சென்று சோதனையிட்டுள்ளனர். அப்போது, அவர் உண்மையிலேயே மதுகுடித்துக் கொண்டு, போதையில் இருந்துள்ளார்.