பாட்னா:பிகார் மாநிலம் மஹோபா மாவட்டம் சிக்காரா கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படிக்கும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், ஆசிரியர்களுக்காக ஒதுக்கப்பட்ட குடத்திலிருந்து தண்ணீர் குடித்துள்ளார்.
இதைக் கண்ட அப்பள்ளி ஆசிரியர் கல்யாண் சிங், மாணவியை தாக்கியுள்ளார். அப்போது சாதிய ரீதியாக கடுமையாக திட்டியதோடு, சரமாரியாக தாக்கியதாக மாணவி பெற்றோர் கூறினர். இதையடுத்து அரசு அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. இதைக் கேட்ட அதிகாரிகள், சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க, கல்வித்துறைக்கு அறிவுறுத்துவதாக தெரிவித்தனர்.