பிகார் மாநில தலைமைச் செயலர் அருண்குமார் சிங் கடந்த நான்கு நாள்களுக்கு முன்னர் கரோனாவால் பாதிக்கப்பட்டு பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அருண்குமார் சிங் சிகிச்சைப் பலனின்றி இன்று (ஏப். 30) உயிரிழந்தார். அவருக்கு ஏற்கனவே ரத்தப் புற்றுநோய் இருப்பது குறிப்பிடத்தக்கது.