பாட்னா:கரோனா தொற்றுப் பரவலின் வீரியம் மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, நாட்டில் ஒருநாள் பாதிப்பு என்பது மீண்டும் ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. தலைநகர் டெல்லியில் நாளொன்றுக்கு கரோனா பாதிப்பு 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பிகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு கரோனா பாசிட்டிவ் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து மருத்துவர்கள் அவரை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். தொடர்ந்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட நிதிஷ்குமார் முறையான மருந்துகளை எடுத்துக்கொண்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.