சாப்ரா:பீகார் மாநிலம், சாப்ரா பகுதியில் 12 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிக ரத்தப் போக்கு உள்ளிட்ட பிரச்னைகளுடன் உள்ளூர் மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டது குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நடத்திய விசாரணையில் பாலியல் வன்கொடுமை கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜன.15) மாலை தன் நண்பருடன் சிறுமி வெளியே சென்றுள்ளாள். வீட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்த நிலையில், மறைந்திருந்த நான்கு பேர், வலுக்கட்டாயமாக சிறுமியை கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.
சிறுமியின் வாக்குமூலத்தின் படி இருவர் அடையாளம் காணப்பட்டு அதில் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், மற்றவர்களை தேடும் பணியில் தீவிரமாக களமிறங்கி உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். பிடிபட்ட நபர், சிறுமியின் ஊரைச் சேர்ந்தவர் என்றும் மற்றவர்கள் குறித்து தொடர் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் கூறினர்.
12 வயது சிறுமி பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தந்தை உயிரிழந்த நிலையில், தாய் கூலி வேலை செய்து குடும்பம் மற்றும் சிறுமியைப் பேணிக்காத்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் குடும்பத்தாரை உருக்குலையச் செய்துள்ளது.
இதையும் படிங்க:Priyanka Gandhi: கன்னட குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் - பிரியங்கா காந்தி