தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பட்டாசுகளை தின்ற எருமைக்கு வாய் சேதம் - Buffalo eats firecracker in Kaimur

பிகாரில் பட்டாசுகளை தின்ற எருமைக்கு வாய் சேதமடைந்ததை ஒட்டி, இதுதொடர்பாக வனத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பட்டாசுகளை தின்ற எருமைக்கு வாய் சேதம் - வனத்துறையிடம் புகார்
பட்டாசுகளை தின்ற எருமைக்கு வாய் சேதம் - வனத்துறையிடம் புகார்

By

Published : Oct 16, 2022, 9:03 AM IST

பாட்னா: பிகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தின் செயின்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சரையா வனப்பகுதியில், காட்டுப்பன்றியைத் விரட்ட வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை எருமை ஒன்று தின்றுள்ளது. இதனால் அதன் வாய் பகுதிகள் சேதமாகி உள்ளன.

இந்த சம்பவம் குறித்து பேசிய கால்நடை உரிமையாளர் சதுர்கன் பிந்த், "எருமை மாடு மேய்க்க அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்றேன். அங்கு மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தபோது, காட்டுப்பன்றியை விரட்டும் பட்டாசுகளை தற்செயலாக எருமை மென்று தின்றது. இதனால் பட்டாசுகள் எருமையின் பற்கள் மற்றும் ஈறுகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

நான் வட்ட அலுவலரிடன் இதுதொடர்பாக பேசினேன். ஆனா,ல் இது வனத்துறையின் வரம்பிற்கு உட்பட்டது என்று அவர் என்னிடம் கூறினார். எனது எருமை தனியார் கால்நடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார். அதோடு பட்டாசுகளை வனப்பகுதிக்குள் வைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளேன் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:தெருக்களில் சுற்றித்திரியும் மாட்டின் உரிமையாளர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் அபராதம்!

ABOUT THE AUTHOR

...view details