தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பீகாரில் கர்ப்பிணிச் சிறுமி எரித்துக் கொலை! - கோர சம்பவத்தின் கொடூர பின்னணி! - பீகார்

கர்ப்பமாக்கிய காதலனை திருமண செய்து கொள்ளுமாறு கூறி வற்புறுத்தியதாக மைனர் சிறுமி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 18, 2023, 9:51 AM IST

நவாடா: பீகாரில் தன்னை கர்ப்பமாக்கிய காதலனை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாக மைனர் சிறுமியை, காதலன் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிருடன் தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நவாடா பகுதியைச் சேர்ந்த சிறுமியும், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞனும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

காதலனுடன் ஏற்பட்ட நெருக்கத்தால் மைனர் சிறுமி கருவுற்றதாக கூறப்படுகிறது. தன் வீட்டிற்கு தெரிந்தால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என்று கூறிய சிறுமி, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு காதலனிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. காதலியின் பேச்சு சட்டை செய்து வந்த இளைஞர் திருமணம் செய்து கொள்ளாமல் பல்வேறு காரணங்களை கூறி காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என காதலனிடம், சிறுமி கட்டாயமாக கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் எரிச்சலடைந்த இளைஞர், சிறுமியை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்றும் இதே போல் சிறுமி திருமணம் குறித்து பேசியதால் கோபமடைந்த இளைஞர் கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இளைஞர் மற்றும் அவரது உறவினர்கள் ஒன்று சேர்ந்து கர்ப்பிணி என்றும் பாராமல் சிறுமியை தீ வைத்து உயிருடன் எரித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தால் கொலை செய்துவிடுவோம் என்று சிறுமியின் பெற்றோரை மிரட்டிய கும்பல், அவர்களையும் வீட்டுக் காவலில் வைத்ததாக கூறப்படுகிறது.

ஏறத்தாழ நான்கு நாட்கள் வரை வீட்டுக் காவலில் வைத்து அடைக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வீட்டுக் காவலில் இருந்து விடுதலையான சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் இந்த கோர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.

16 வயது சிறுமியின் பெற்றோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், புகார் தொடர்பாக இளைஞர் மட்டும் அவரது குடும்பத்தினர் 4 மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:"தி ஈகிள் இஸ் கம்மிங்" - பேஸ்புக், யூடியூபில் கம்பேக் கொடுத்த டொனால்ட் டிரம்ப்!

ABOUT THE AUTHOR

...view details