தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அக்னிபாத் எதிர்ப்பு: பீகாரில் பந்த் - வலுக்கும் போராட்டம் - அக்னிபாத் சர்ச்சை

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மாணவர்கள் அமைப்புகள் அழைப்புவிடுத்ததின் பேரில் இன்று (ஜூன் 18) ஒருநாள் முழுகடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

அக்னிபாத் எதிர்ப்பு பீகாரில் பந்த்
அக்னிபாத் எதிர்ப்பு பீகாரில் பந்த்

By

Published : Jun 18, 2022, 11:57 AM IST

பாட்னா: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட அக்னிபாத் ஆட்சேர்ப்புத் திட்டம், நான்கு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ராணுவ அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய முன்மொழிகிறது.

இருப்பினும், இவர்கள் இறுதி ஓய்வூதிய பலன்களை பெறுவதற்கு நிர்ணயிக்கும் பரிசீலனைக்கு தகுதி பெற மாட்டார்கள். எனவே, அத்திட்டத்திற்கு எதிராக ராணுவத்தில் நாட்டம் கொண்ட இளைஞர்கள் நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பீகாரில், நேற்றைய (ஜூன் 17) மூன்றாம் நாள் போராட்டத்தில், விக்ரம்ஷிலா எக்ஸ்பிரஸ் ரயிலின் மூன்று பெட்டிகள் போராட்டக்காரர்களால் எரிக்கப்பட்டது. மேலும், ரயில் மறியல் போராட்டத்தால் நாடு முழுவதும் 200-க்கும் ரயில் சேவைகள் தடைப்பட்டன.

இந்நிலையில், நான்காவது நாளாக இன்று (ஜூன் 19) முழு கடையடைப்பு போராட்டத்திற்கு மாநிலத்தில் உள்ள பல்வேறு மாணவ அமைப்பினரும் அழைப்பு விடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து, ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் மாணவ அமைப்பினரின் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு தங்களின் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

தொடர்ந்து, கடையடைப்பு போராட்டத்தின்போது, ஜெகனாபாத் மாவட்டத்தின் தெக்தா கிராமத்தில் காவல் நிலையம் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துக்கு தீ வைக்கப்பட்டு, காவல் நிலையம் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. கடுமையான போராட்டம் காரணமாக பீகாரின் 12 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. போராட்டம் மோசமாக உள்ள 12 மாவட்டங்களில் இணையசேவை முடக்கப்பட்டதாக சட்டம், ஒழுங்கு காவல் துறை உயர் அதிகாரி சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:அக்னிபாத் வீரர்களுக்கு துணை ராணுவத்தில் 10% ஒதுக்கீடு - உள்துறை அமைச்சர் அமித் ஷா

ABOUT THE AUTHOR

...view details