பாட்னா:பிகார் மாநிலம் சமஸ்திபூரில் வழிப்பாட்டுக்காக சென்றுகொண்டிருந்த பக்தர்கள் கூட்டத்தின் மீது எஸ்யூவி கார் மோதியதில் 15 பேர் காயமடைந்தனர். அவர்களில் 9 பேர் கவலைக்கிடமா உள்ளனர். இதுகுறித்து முஃபாசில் போலீசார் தரப்பில், இந்த விபத்து இன்று (நவம்பர் 28) சமஸ்திபூரின் கன்ஹையா சௌக் அருகே நடந்துள்ளது. இந்த பகுதியில் நடந்த மத வழிபாட்டுக்காக ஏராளமான மக்கள் கூட்டமாக சென்றுகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்யூவி கார் கட்டுப்பாட்டை மீறி இந்த கூட்டத்தின் மீது மோதியது.
பிகார்: பக்தர்கள் கூட்டத்தின் மீது கார் மோதியதில் 9 பேர் கவலைக்கிடம் - பிகார் கார் விபத்து
பிகார் மாநிலம் சமஸ்திபூரில் பக்தர்கள் கூட்டத்தின் மீது எஸ்யூவி கார் மோதியதில் 15 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 9 பேருடைய உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இதுகுறித்து கிராம மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் மீட்புப்பணிகள் நடந்தன. அனைவரும் சமஸ்திபூரின் சதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 9 பேருடைய உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் மேல்சிகிச்சைக்காக தர்பங்கா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். முதல்கட்ட தகவலில், எஸ்யூவி காரை ஓட்டி வந்தது சமஸ்திபூரை சேர்ந்தசாரதி என்பது தெரியவந்துள்ளது. அவரை கைது செய்துள்ளோம். விசாரணை நடத்தப்பட்டுவருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:கணவனின் உடல் பாகங்களை வெட்டி முட்புதரில் வீசிய மனைவி