மும்பை:இந்தியாவின் கோடீஸ்வரர்களில் ஒருவரும், ஆகாஸ் ஏர் பவுண்டேஷனின் நிறுவனருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மும்பையில் இன்று (ஆக. 14) காலை உயிரிழந்தார். இவருக்கு வயது 62. இவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் காரணமாக ஜுன்ஜுன்வாலா மும்பை கேன்டி மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று (ஆக. 13) இரவு முதல் ஜுன்ஜுன்வாலாவின் உடல்நிலை மோசமானதாக மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், இன்று காலை சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்ட நிலையில், ஜுன்ஜுன்வாலா உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜுன்ஜுன்வாலா, 1960ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி மும்பையில் பிறந்தார். மும்பையில் வளர்ந்த இவர், கல்லூரி படிப்பை சையத்ஹாம் கல்லூரியில் 1985இல் முடித்தார். பின்னர் இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் ஜுன்ஜுன்வாலா சேர்ந்து மேற்படிப்பை முடித்தார். இதனைத்தொடர்ந்து, பங்குச்சந்தை முதலீட்டலாளரான ரேகாவை திருமணம் செய்து கொண்டார்.
ஜுன்ஜுன்வாலா தனியாருக்குச் சொந்தமான RARE எண்டர்பிரைசஸ் என்ற பங்கு வர்த்தக நிறுவனத்தை நடத்தி வந்தார். விமான சேவை நிறுவனமான ஆகாஷா ஏர் பவுண்டேஷனின் உரிமையாளரும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவன் இந்த ஆகஸ்ட் மாதம் முதல் அதன் சேவையை தொடங்கி இருந்தது.
இதுகுறித்து விமானப் போக்குவரத்து சரியாக இல்லாதபோது, ஏன் விமான நிறுவனத்தைத் தொடங்க திட்டமிட்டார் என்று அதிகம் பேர் கேள்வி எழுப்பினர், அதற்கு அவர், 'தோல்விக்கு எப்போதும் நான் தயாராக இருக்கிறேன்' என்று பதிலளித்தார். இந்தியப் பங்குச் சந்தையை மீது ராகேஷ் ஜுன்ஜுன்வாலா எப்போதும் ஆர்வமாக இருந்தார். பங்குச்சந்தையின் பிதாமகன் என்று அவர் அழைக்கப்படுகிறார்.
மோடி ட்விட்டரில் இரங்கல்: இவரின் மறைவு குறித்து பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில், 'ராகேஷ் ஜுன்ஜுன்வாலா யாராலும் கட்டுபடுத்த முடியாதவராக இருந்தார். அவரது முழு வாழ்க்கையிலும் நகைச்சுவை மற்றும் நுண்ணறிவு மிக்கவராக திகழ்ந்தார். இந்திய பங்குச்சந்தை உலகில் அவரது அழியாத பங்களிப்பை விட்டுச் சென்றுள்ளார். இந்தியாவின் முன்னேற்றத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். அவரது மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:ஜம்மு காஷ்மீரில் கையெறி குண்டு தாக்குதலில் போலீஸ் உயிரிழப்பு