அரபிக் கடலில் சொகுசுக் கப்பல் ஒன்றில் நடந்த விருந்தில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் அக்டோபர் 4ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில் ஆர்யன் கான் பிணை கோரிய நிலையில், அதன் விசாரணை மும்பை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆர்யன் கானின் பிணை மனுவை தள்ளுபடி செய்துள்ளார். ஆர்யன் கான்னுடன் சேர்ந்து பிணை கோரியிருந்த ஏழு பேருக்கும் பிணை மறுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வழக்கு விசாரணையின்போது ஆர்யன் கானின் வழக்கறிஞர் நீதிபதிமுன் வாதிடுகையில், "நான் இந்தியன். எனது பெற்றோர் இந்தியாவில் வசிக்கின்றனர். என்னிடம் இந்தியா பாஸ்போர்ட் உள்ளது. நான் அலுவலர்கள் முழு ஒத்துழைப்பைத் தருகிறேன்.