தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

125 யூனிட் மின்சாரம் இலவசம் - சபாஷ் போடவைத்த அறிவிப்பு - எங்கே? - சம்பா

ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 125 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என ஹிமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர் அறிவித்துள்ளார்.

Jai Ram Thakur
Jai Ram Thakur

By

Published : Apr 16, 2022, 5:44 PM IST

ஹிமாச்சலப் பிரதேசம்: ஹிமாச்சலப் பிரதேசத்தின் 75-வது அமைப்பு தினத்தையொட்டி, சம்பா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அம்மாநில முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர் கலந்துகொண்டார். அப்போது, என்.சி.சி மற்றும் என்.எஸ்.எஸ் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

இதைத்தொடர்ந்து, கூட்டத்தில் உரையாற்றிய அவர், 'மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்பத்திற்கும் தலா 125 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். பெண்களுக்கு பேருந்து கட்டணத்தில் 50 விழுக்காடு தள்ளுபடி செய்யப்படும். இதன்மூலம் 11 லட்சத்து 50 ஆயிரம் குடும்பங்கள் பயனடைவார்கள்' என்று தெரிவித்தார்.

கிராமப்புறங்களில் குடிநீர் கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும், சம்பாவில் சிறிய தலைமைச் செயலகம் திறக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் உத்தாலா-ஹோலி சாலை திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மாநில அமைப்பு தினத்தையொட்டி, அரசு ஊழியர்களுக்கு எந்தவித சலுகையும் வழங்கப்படவில்லை.

இதையும் படிங்க: ராமேஸ்வரத்தில் பிரமாண்ட ஹனுமன் சிலை- பிரதமர் அலுவலகம் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details