ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் சட்ட மேலவை காலியிடங்களுக்கான தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஆந்திரப் பிரதேச சட்ட மேலவையில் நிரப்பப்பட வேண்டிய 8 உள்ளாட்சி பிரதிநிதிகளின் தொகுதிகளுக்கும், தெலங்கானா சட்ட மேலவையில் 12 உள்ளாட்சி பிரதிநிதிகளின் தொகுதிகளுக்கும், கர்நாடகா சட்ட மேலவையில் 20 உள்ளாட்சி பிரதிநிதிகளின் தொகுதிகளுக்கும், மகாராஷ்டிரா சட்ட மேலவையில் 5 உள்ளாட்சி பிரதிநிதிகளின் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.
இம்மாநிலங்களின் சட்ட மேலவை காலியிடங்களுக்கான தேர்தல் அறிவிப்பு 2021 நவம்பர் 16 அன்று வெளியிடப்படும். வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 2021 நவம்பர் 23.