வாஷிங்டன்: இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த மாதம் தென் கொரியா மற்றும் ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணம் மே 20 முதல் 24 வரை திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடையே டோக்கியோவில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார். அப்போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப்பேசுவார். அதேபோல,தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல், ஜப்பான் பிரதமர் கிஷிடா ஃபுமியோ இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.