டெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று (செப்.9) நடைபெற்ற G20 உச்சி மாநாட்டில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ஆதரவு நாடுகள் வழியாக அதாவது மத்திய கிழக்கு மற்றும் ஜரோப்பா வழியாக இந்தியாவை இணைக்கும் கப்பல் வழித்தடத்திற்கான திட்டத்தினை அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு மூலம் உலக அளவில் சிறந்த வர்த்தகத்தை உருவாக்க கூடிய சாத்திய கூறுகள் உள்ளன.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் ஃபைனர் கூறும் போது, G20 உச்சி மாநாட்டில் அறிவிக்கப்பட்ட கப்பல் மற்றும் ரயில் போக்குவரத்து வழித்தடத்திற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்க, இந்தியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐரோப்பிய யூனியன் மற்றும் G20 யில் உள்ள மற்ற நாடுகளும் உள்ளன என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உலக அளவில் உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டினை அதிகப்படுத்த இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். புதிதாக அமைக்கப்பட உள்ள ரயில் மற்றும் கப்பல் வழித்தடத்தின் மூலம் ஏரிசக்தி பொருட்களுக்கான வர்த்தகம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் உலகில் உள்ள பல நாடுகளின் பொருளாதாரத்தை இணைக்கும் சீனாவின் பெல்ட் மற்றும் சாலை முயற்சிக்கு இணையாக இந்த திட்டம் இருக்கும் என தெரியவருகின்றன.
அமெரிக்க அதிபரின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் ஃபைனர் கூறும் போது, இந்த ரயில் மற்றும் கப்பல் வழித்தடத்தை அமைப்பதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளதாக தெரிவித்தார். அதில், எரிசக்தி பொருட்கள் வழித்தடம் மற்றும் டிஜிட்டல் தகவல் தொடர்புகளை அதிகரிப்பத்தால் நாடுகளின் வர்த்தகத்தை மேம்படுத்த முடியும், இரண்டாவதாக குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளுடைய வளர்ச்சிக்கு தேவையான உள்கட்டமைப்பு வளர்ச்சி பெரும் என்றும், மூன்றாவதாக மத்திய கிழக்கு நாடுகளின் பாதுகாப்பு குறைபாடுகளை களைய உதவும் என கூறினார்.