தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

5ஜி அலைக்கற்றை ஏலம் 7ஆவது நாளாக தொடக்கம்... ஏலத்தொகை ரூ.1.50 லட்சம் கோடியை தாண்டியது...

டெல்லியில் 5ஜி அலைக்கற்றை ஏலம் 7ஆவது நாளாக தொடங்கியது. 37 சுற்றுகள் முடிவில் ஏலத்தொகை ரூ.1.50 லட்சம் கோடியை தாண்டிவிட்டது.

bidding-begins-for-5g-spectrum-auction-on-day-7
bidding-begins-for-5g-spectrum-auction-on-day-7

By

Published : Aug 1, 2022, 11:54 AM IST

டெல்லி: அதிவேக இணையச் சேவைகளுக்கான 5ஜி அலைக்கற்றை ஏலம் ஜூலை 26ஆம் தேதி தொடங்கியது. இதில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, சுனில் மிட்டலின் பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா, கவுதம் அதானியின் அதானி எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. 7 நாள்களாக தொடர்ந்துவரும் ஏலத்தில் நேற்றைய நிலவரப்படி 37 சுற்றுகள் முடிந்துள்ளன.

ஏலத்தொகை ரூ.1.50 லட்சம் கோடியை தாண்டிவிட்டது. முதல் நாளிலேயே ஏலத்தொகை ரூ. 1.45 லட்சம் கோடியை எட்டியிருந்தது. குறிப்பாக உத்தரப் பிரதேசத்தின் லக்னோ, அலகாபாத், வாரணாசி, கோரக்பூர் மற்றும் கான்பூர் வட்டங்களில் 1,800 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசைக்காக அதிகத்தொகை கொடுக்கப்பட்டுள்ளது. மொத்த ஏலத்தில் 71 விழுக்காடு முடிந்துவிட்டது.

இந்த ஏலம் குறைந்த அதிர்வெண், நடுத்தர அதிர்வெண், உயர் அதிர்வெண் என்று மூன்று வகைகளில் நடத்தப்படுகிறது. 1. 5ஜி சேவையில் குறைந்தபட்ச வேக இணையத்தொடர்பிற்காக 600, 700, 800, 900, 1,800, 2,100, 2,300 மெகாஹெர்ட்ஸ் அதிர்வெண் வகை ஏலம். 2. 5ஜி சேவையில் நடுத்தர வேக இணையத்தொடர்பிற்காக 3,000 மெகாஹெர்ட்ஸ் அதிர்வெண் ஏலம். 3. 5ஜி சேவையில் உயர் வேக இணையத்தொடர்பிற்காக 26 ஜிகாஹெர்ட்ஸ் அதிர்வெண் ஏலம் ஆகும்

இந்த சேவைகள் 4ஜியை விட 10 மடங்கு பதிவிறக்கத்திலும், பஃபரிங்கிலும் அதிகமாக செயல்படும். முழு நீள உயர்தர வீடியோக்களை கூட சில நொடிகளில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். குறிப்பாக இந்த சேவை 5 முதல் 7 வரையிலான தலைமுறை வாகனங்கள் இணைப்பு, ஆக்மென்ட் ரியாலிட்டி, மெட்டாவர்ஸ், கிளவுட், கேமிங் உள்ளிட்டவையில் சிறந்த அனுபவத்தை கொடுக்கும்.

இதையும் படிங்க:80 வினாடிகளில் இனி துணி துவைக்கலாம்.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!

ABOUT THE AUTHOR

...view details