தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வெறுப்பு பரப்புரை; முதலமைச்சர் தந்தைக்கு நீதிமன்ற காவல்! - சத்தீஸ்கர்

Bhupesh Bagel father
Bhupesh Bagel father

By

Published : Sep 7, 2021, 4:20 PM IST

Updated : Sep 7, 2021, 6:52 PM IST

16:18 September 07

சத்தீஸ்கர் காங்கிரஸ் முதலமைச்சர் பூபேஷ் பாகலின் 75 வயதான நந்த் குமார் பாகல் இன்று (செப்.7) கைது செய்யப்பட்ட நிலையில் அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ராய்ப்பூர் :  பிராமணர்கள் குறித்து ஆட்சேபத்துக்குரிய கருத்துகளை கூறியதாக சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகலின் தந்தை நந்த் குமார் பாகல் காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பூபேஷ் பாகலின் தந்தை நந்த் குமார் பாகலுக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு செப்.21ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் இருப்பார்.

புகார்- விசாரணை

எனினும் அவர் பிணைக்கு விண்ணப்பிக்க மறுத்துவிட்டார். முன்னதாக இன்று (செவ்வாய்க்கிழமை) பிராமண சமூகம் குறித்து ஆட்சேபத்துக்குரிய கருத்துகளை கூறியதாக அவர் கைதுசெய்யப்பட்டார்.

இது குறித்து சர்வ் பிராமிண் சமாஜ் சார்பில் டிடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

கைது

இந்நிலையில் நந்த் குமார் பாகல் காவலர்களால் கைதுசெய்யப்பட்டுள்ளார். முன்னதாக நந்த் குமார் பாகல், லக்னோவில் பேசும்போது, “பிராமணர்கள் வெளிநாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள். அவர்களை கிராம மக்கள் புறக்கணிக்க வேண்டும். எங்கள் கிராமத்துக்குள் நீங்கள் வர வேண்டாம் என கூற வேண்டும்” என்றார்.

மேலும் ராம பிரான் குறித்தும் ஆட்சேபத்துக்குரிய கருத்துகளை கூறினார் என்றும் கூறப்படுகிறது. நந்த் குமார் பாகலின் பேச்சுகள் தொடர்பான காணொலிகள் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகின்றன.

பிராமணர்கள் குறித்து ஆட்சேபத்துக்குரிய கருத்துகள் தெரிவித்த முதலமைச்சரின் தந்தை காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : பிராமணர்கள் ஆதரவுடன் உத்தரப் பிரதேசத்தில் ஆட்சி- மாயாவதி!

Last Updated : Sep 7, 2021, 6:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details