தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கிண்டல் செய்த நபர்களை தட்டிக்கேட்ட பெண்..முகத்தில் கத்தியால் கொடூரமாக தாக்கிய மூவர்: ம.பி.யில் அதிர்ச்சி - மபி முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நேரில் ஆறுதல்

மத்திய பிரதேசத்தில் தன்னை கிண்டல் செய்த நபர்களை அப்பெண் தட்டிக்கேட்ட நிலையில் ஆத்திரமடைந்த கும்பல் பெண்ணை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் முகத்தில் பலத்த காயமடைந்த பெண்ணுக்கு 118 தையல்கள் போடப்பட்டுள்ளன.

முதலமைச்சருடன் காவல்துறை அலுவலர்கள் சந்திப்பு
முதலமைச்சருடன் காவல்துறை அலுவலர்கள் சந்திப்பு

By

Published : Jun 12, 2022, 8:46 PM IST

போபால் (மத்திய பிரதேசம்): மத்தியப்பிரதேசம், போபால் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஜூன் 9ஆம் தேதி இரவு கணவருடன் பைக்கில் சென்றுள்ளார்.

அப்போது வழியில் தண்ணீர் பாட்டில் வாங்க ஸ்ரீ பேலஸ் ஹோட்டலில் நின்றுள்ளனர். கணவர் தண்ணீர் வாங்க சென்ற நிலையில், அந்தப் பெண் ஹோட்டல் வெளியில் நின்றுள்ளார்.

அப்போது அங்கு ஆட்டோவில் வந்த மூன்று நபர்கள் பெண்ணை கிண்டல் செய்தும், ஆபாசமாகவும் பேசியுள்ளனர். இதையடுத்து அந்த பெண் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவர்கள் தம்பதியினரிடம் சண்டையிடத் தொடங்கியுள்ளனர். கோபமடைந்த பெண் அவர்களில் ஒருவரை அடித்துள்ளார்.

இதையடுத்து அப்பகுதியில் கூட்டம் கூடத் தொடங்கியதும் மூன்று நபர்களும் தப்பி ஓடியுள்ளனர். தம்பதியினர் அப்பகுதியில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். டிடி நகர் ரோஷன்புரா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த அந்த மூன்று நபர்கள் தம்பதியினரை தாக்கியுள்ளனர்.

ஒருவர் பெண்ணின் முகத்தில் சிறிய ரக கத்தி கொண்டு கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பெண்ணை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிசிக்சைக்காக ஹமிடியா மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு , முகத்தில் 118 தையல்கள் போடப்பட்டன.

இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் பாட்ஷா பெக் மற்றும் அஜய் என்கிற பிட்டி சிப்டேவை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றொரு நபரைத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், அந்தப் பெண்ணை இன்று அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் பெண்ணின் துணிச்சலைப் பாராட்டி ரூ. 1 லட்சம் வழங்கினார்.

முதலமைச்சருடன் காவல்துறை அலுவலர்கள் சந்திப்பு

மேலும், மாநிலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது என்றும்; இச்சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல் துறை அலுவலர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: பாத்திரங்களை திருடியதற்காக தாக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details