தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தமிழர்கள் காட்டும் அன்பை வேறு யாரிடமும் கண்டதில்லை - ராகுல்காந்தி - Bharat Ratna Kamal Haasan

'தமிழ் மக்கள் என் மீது செலுத்தும் அன்பு, வேறு எந்த மாநிலத்திலும் எனக்கு கிடைத்ததில்லை' என தெரிவிக்க இது எங்கள் கலாசாரத்தின் ஒருபகுதி என கமல்ஹாசன் கூறியுள்ளார். மேலும், 'உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா கடைபிடிக்கும் அணுகுமுறையைப் போலவே இந்தியாவையும் சீனா அணுகுகிறது' என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 2, 2023, 6:39 PM IST

உக்ரைனை உலுக்கிய ரஷ்யாவைப் போல, சீனா இந்தியாவை சீண்டுகிறது - ராகுல்காந்தி

டெல்லி:மக்கள் நீதி மய்யம் கட்சி (Makkal Needhi Maiam) தலைவரும் நடிகரமான கமல்ஹாசன் (Kamal Haasan) கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி, டெல்லியில் ராகுல் காந்தி (Rahul Gandhi MP) மேற்கொண்ட இந்திய ஒற்றுமை (Bharat joda Yatra) பயணத்தில் பங்கேற்றார். இந்த நிகழ்வு இந்திய முழுவதுமான அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அதே நேரத்தில், மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவரான கமல்ஹாசன், தனது ஆதரவை காங்கிரஸ் கட்சிக்கு அளித்து வருவதாக இந்த செயல்பாடு உள்ளதாக நாடு முழுவதும் உள்ள அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கமல் ஹாசன் மற்றும் ராகுல் காந்தி இடையே தனிப்பட்ட கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் தமிழ் மொழி, வெறுப்பு அரசியல், சீனா இந்தியா எல்லைகள் பிரச்னை (India-China Border Dispute) உள்ளிட்ட பலவற்றைப் பற்றி கடந்த டிச.25ஆம் தேதி டெல்லியில் உரையாடினார்கள்.

அந்த உரையாடலின் போது ராகுல்காந்தி, 'நான் பல மாநிலங்களுக்குச் சென்றுள்ளேன். ஆனால், தமிழ் மக்கள் என் மீது செலுத்தும் அன்பு, வேறு எந்த மாநிலத்திலும் எனக்கு கிடைத்ததில்லை. நான் மகாராஷ்டிராவிற்கு சென்று உள்ளேன்; அங்கும் மக்கள் என் மீது அன்பு செலுத்துவார்கள். ஆனால், தமிழ் மக்கள் என் மீது ஆர்வமாகவும் உணர்ச்சிகரமாகவும் அன்பு செலுத்துகின்றனர்.

நான் ஒவ்வொரு முறை தமிழ்நாட்டுக்கு வரும்போது, நான் வியப்பில் ஆழ்ந்துள்ளேன். என் மீது ஏன் இந்த மக்கள் இதுபோன்று உணர்ச்சிகரமாக அன்பு செலுத்துகிறார்கள்; அதற்கு என்ன காரணம் என்று நீங்கள் கூற வேண்டும்' என கமல்ஹாசனிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதில் அளிக்கும் விதமாக பேசிய கமல்ஹாசன்,'இது கலாசாரத்தின் ஒரு பகுதியாகும். தமிழர்கள், பல்வேறு யுத்தங்களை கண்டுள்ளனர். பௌத்தம்(Buddhism), சமணம்(Jainism) என அனைவரிடம் இருந்தும் அவற்றைக் கற்றுள்ளனர். அனைத்தும் கலந்த ஒரு கலவையே இந்த கலாசாரம். இதைத்தான் எம்ஜிஆர், காமராஜர் ஆகியோர் அனுபவித்தனர். தமிழ் மக்கள் தமக்கு பிடித்த தலைவர்களை காணும்போது, கண்கலங்கியும் குதூகலமும் ஆகுகின்றனர்' எனத் தெரிவித்தார்.

இதனைக் குறிப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, தமிழ் மொழி, 'தமிழ் மக்களுக்கு முக்கியத்துவமாக இருக்கிறது’ என்று தெரிவித்தார். அப்போது பேசிய கமல்ஹாசன், 'மிகவும் முக்கியம்தான். கடவுளை நம்பாதவர்கள் (Atheist) கூட, தமிழை போற்றுகின்றனர்' என்று கூறினார்.

உக்ரைன்-ரஷ்யா போல இந்தியா-சீனா:சில தினங்களுக்கு முன்பு இந்தியா-சீனா எல்லையில் அத்துமீறிய சீன ராணுவத்தினரின் செயல் உட்பட நாட்டின் முக்கிய நடப்புகள் குறித்து கலந்துரையாடினர், கமல்ஹாசன். அப்போது பேசிய ராகுல் காந்தி, "உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா கடைபிடிக்கும் அணுகுமுறையைப் போலவே இந்தியாவையும் சீனா அணுகுகிறது'' என்றார்.

மேலும் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 'இந்தியாவின் எல்லையை மாற்ற அச்சுறுத்தி வருவதால், உக்ரைனுடன் ரஷ்யா கடைப்பிடிக்கும் அதே கொள்கையை இந்தியாவுடன் சீனா கடைப்பிடிக்கிறது'' என்றும் தெரிவித்தார்.

எல்லை அத்துமீறல்; ஒற்றுமையின்மையே காரணம்:மேலும் ராகுல் காந்தி, 'இந்தியாவின் எல்லைப்பகுதியை அச்சுறுத்தி மாற்ற முயற்சிப்பதாகவும், அதற்காக உக்ரைனுடன் ரஷ்யா கடைப்பிடித்த கொள்கையை இந்தியாவுடன் சீனா கடைப்பிடிக்கிறது. இதன் ஒருபகுதியாக, இந்தியா-சீனா எல்லையில் ஏற்பட்ட அத்துமீறலின் பின்னணியில் நாட்டில் பலவீனமான பொருளாதாரம், நாட்டு மக்களிடையே நிலவும் குழப்பம் நிறைந்த வெறுப்பும் கோபமும் இத்தகைய தாக்குதலுக்கு ஒரு வகையில் தொடர்பை ஏற்படுத்துகிறது.

இந்தியா மீதான சீனாவின் அத்துமீறல்:முன்னதாக, உக்ரைன் நாடானது மேற்கத்திய நாடுகளுடன் வலுவான உறவை வைத்திருப்பதை நாங்கள் விரும்பவில்லை. இதனை நாங்கள் மாற்றுவோம் என ரஷ்யர்கள் கூறினர். அதேபோல தற்போது, இந்தியாவின் மீது சீனாவும் அதே கொள்கையைத் தான் பயன்படுத்துகிறது. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். ஏனென்றால், நாங்கள் நினைத்தால் லடாக்கில் நுழைவோம், நாங்கள் அருணாச்சலப்பிரதேசத்திற்குள் நுழைவோம். பின் உங்கள் புவியியல் அமைப்பையே மாற்றுவோம் என்பதைப் போல தான் அவர்களின் நடவடிக்கையை நான் பார்க்கிறேன்'' என்றார்.

உலகளாவிய பார்வை அவசியம்: தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, "21-ம் நூற்றாண்டில் பாதுகாப்பு என்பது ஒரு இன்றியமையாத முழுமையான விடயமாக மாறிவிட்டது. அதைப் பற்றிய உலகளாவிய பார்வையை ஒருவர் கொண்டிருப்பது அவசியமானது. அத்துடன், எங்கள் அரசாங்கம் அதை முற்றிலும் தவறாகக் கணக்கிட்டுள்ளது என்று நான் நினைக்கிறேன். எல்லையில் சண்டையிட்ட ஒருவர், தற்போது எல்லா இடங்களிலும் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், மோதல்களின் வரையறை மாறிவிட்டது' என்றும் அவர் கூறினார்.

சீனா விவகாரத்தில் முன்னெச்சரிக்கை: தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, 'இதில் முக்கியமான ஒன்று என்னவெனில், போருக்கு செல்லவேண்டியதில்லை, மாறாக யாராலும் தாக்க முடியாதவாறு உறுதியுடன் இருப்பதே அவசியம். இத்தோடு, பலவீனமான பொருளாதாரம், குழப்பமான குறிக்கோள், வெறுப்பும் கோபமும் கொண்டிருப்பதுக்கும் இடையே தொடர்பைக் கொண்டுள்ளது. ஏனெனில், உள் நாட்டு விவகாரங்கள், நாட்டுக்குள் குழப்பமான இணக்கமின்மையையே நாம் கையாளுகிறோம் என அவர்கள் (சீனர்கள்) அறிவார்கள்.

ஒற்றுமை அவசியம்:எனவே, 21-ம் நூற்றாண்டில் மிக முக்கியமான விடயம் என்னவென்றால், நாட்டிற்குள் ஒற்றுமை உள்ளது. அதே வேளையில், ஒருவருக்கொருவர் மக்கள் சண்டையிட்டுக் கொள்ளாமல் நல்லிணக்கத்துடன் வாழவேண்டும். அப்போதுதான், நாடு அமைதியாக இருக்கும்' எனக் குறிப்பிட்டார்.

எதிரிகள் வாய்ப்பு அளிக்கக்கூடாது: 'எனவே ஒரு இந்திய நபராக, நான் போர்வெறி கொண்ட ஒருவராக இருக்க விரும்பவில்லை. ஆனால், எல்லையில் உண்மையான பிரச்னைகள் உள்ளன என்பதையும், அந்தப் பிரச்னைகள் நம் நாட்டிற்குள் என்ன நடக்கிறது என்பதையும் நம் நாடு அறிந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்தியர்கள் இந்தியர்களுடன் சண்டையிடும்போது, பொருளாதாரம் வேலை செய்யாதபோது, வேலையின்மை இருக்கும்போது, வெளியிலிருந்து வரும் எதிரிகள் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அரசாங்கத்திடம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு விடயம் என்னவென்றால், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஊடகங்களிடம் இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் எதிர்க்கட்சிகளிடமாவது இது குறித்த விடயங்களைப் புரிந்துகொண்டு பேச வேண்டும் என்பதுதான். நாங்கள் உங்களுக்கு உதவலாம்; உங்களுக்கு ஆலோசனை வழங்கலாம். ஆனால், பாஜகவினர் கேட்பதாக இல்லை. இது எல்லாவற்றையும் நாங்கள் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளோம்" என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க: Rahul Gandhi: கொல்கத்தாவில் பாரத் ஜடோ யாத்திரை!

ABOUT THE AUTHOR

...view details