தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 16, 2020, 11:46 PM IST

ETV Bharat / bharat

உஷார்...அரசு பயன்பாட்டிற்கு ஸூம் ஆப் பாதுகாப்பற்றது - உள்துறை அமைச்சகம்

டெல்லி : வீடியோ கான்ஃபரென்ஸ் முறைக்குப் பயன்படுத்தப்படும் ஸூம் செயலி பாதுகாப்பற்றது எனவும், அதனை அரசு பயன்படுத்த வேண்டாம் எனவும் உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

zoom, ஸூம்
zoom

இதுகுறித்து உள்துறை அமைச்சகத்தின் சைபர் ஒருங்கிணைப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, "ஸூம் ஆப் அரசாங்கம், அரசு அலுவலர்ககளின் பயன்பாட்டிற்கு பாதுகாப்பற்றது, எனவே அச்செயலியை அரசு தேவைகளுக்குப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

மேலும், சொந்த தேவைக்களுக்காக ஸூம் செயலியைப் பயன்படுத்தும் தனிநபர்கள் அங்கீகாரமற்ற நபர்களை கான்ஃபரென்ஸ் கால்களில் சேர்க்கக்கூடாது. மேலும் பாஸ்வொர்ட்டு, ஐடி ஆகியவற்றைக் கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும்" என எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகளவில் ஸூம் செயலி மூலம் ஒருங்கிணைக்கப்படும் கான்ஃபரென்ஸ் கால்கள் ஹேக் செய்யப்படுவதாகப் பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், உள்துறை அமைச்சகம் இவ்வாறு எச்சரித்துள்ளது.

உலகளவில் கடந்த சில வாரங்களாக நிலவிவரும் கரோனா ஊரடங்கு காரணமாக, தனிநபர்கள் முதல் பெருநிறுவனங்கள் வரை அனைவரின் விருப்பத்திற்குரிய செயலியாக ஸூம் உருவெடுத்துள்ளது. பள்ளி, கல்லூரிகளும் இந்த செயலியைக் கொண்டு மாணவர்களுக்குப் பாடம் கற்பித்து வருகின்றன.

இதையும் படிங்க : ஜிடிபி 1.1% ஆக சரிய வாய்ப்பு - எஸ்பிஐ வங்கி தகவல்

ABOUT THE AUTHOR

...view details