தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உலக அளவிலான சிறந்த ஆசிரியருக்கான பரிசு வென்ற ரஞ்சித்சிங் டிசாலே - உலக அலவிலான சிறந்த ஆசிரியருக்கான பரிசு வென்ற ரஞ்சித்சிங் டிசாலே

மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பரிதேவாடி கிராமத்தைச் சேர்ந்த 32 வயதான ரஞ்சித்சிங் டிசாலே, லண்டன் நிறுவனம் வழங்கியுள்ள உலக அளவிலான சிறந்த ஆசிரியருக்கான முதல் பரிசை வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

ரஞ்சித்சிங் டிசாலே
ரஞ்சித்சிங் டிசாலே

By

Published : Dec 4, 2020, 8:25 PM IST

லண்டனை அடிப்படையாகக் கொண்ட வர்க்கி அறக்கட்டளை, 2014ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் நபர்களை தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான வர்க்கி நிறுவனத்தின் பரிசான ஒரு மில்லியன் டாலர் (இந்திய மதிப்பின்படி ஏழு கோடியே 37 லட்சத்து 25 ஆயிரத்து 350 ரூபாய்) வென்றுள்ள டிசாலே, தனது பரிசுத் தொகையில் 50 சதவிகிதத்தை முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள சக ஆசிரியர்களுடன் பகிர்ந்துகொள்வதாக அறிவித்துள்ளார்.

முன்னதாக மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவும் ரஞ்சித்சிங் டிசாலேவை அழைத்துப் பாராட்டுத் தெரிவித்துள்ளார். மேலும், மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி டிஸேலைப் பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

இந்நிலையில், ”கரோனா தொற்று பரவல் கல்வி, மற்றும் கல்வி சார்ந்த துறைகளை பாதித்துள்ள இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு மாணவரும் தங்கள் பிறப்புரிமையான கல்வியை அணுகுவதை உறுதிசெய்ய ஆசிரியர்கள் தங்களால் முடிந்த பணியினை ஆற்றி வருகிறார்கள்” என ரஞ்சித்சிங் டிசாலே தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டில் சோலாப்பூரில் உள்ள பரிதேவடியில் உள்ள ஜில்லா பரிஷத் தொடக்கப் பள்ளியில் டிசாலே இணைந்தபோது, அப்பள்ளி அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் இருந்தது. ஆனால், அவற்றைப் பொருட்படுத்தாது மாணவர்களுக்கு உள்ளூர் மொழியில் பாடப்புத்தகங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான பணியை டிசாலே மேற்கொண்டார்.

மாணவர்களின் தாய்மொழியில் பாடங்களை மொழிபெயர்த்ததோடு மட்டுமின்றி, பாடங்களை ஒலி வடிவத்தில் கேட்டு படிக்க உதவும் வகையில், QR குறியீடுகளை பாடப்புத்தகத்தில் அறிமுகப்படுத்த உதவினார். இந்நிலையில், 100 சதவிகிதம் பெண் பிள்ளைகளின் வருகை, கியூஆர் குறியீடுகளை அறிமுகப்படுத்திய மகாராஷ்டிர மாநிலத்தில் முதல் பள்ளி உள்ளிட்ட சாதனைகளை டிசாலே பணிபுரிந்த பள்ளி படைத்து சிறந்து விளங்கியது.

டிசாலேவின் இந்தத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இந்த கியூஆர் குறியீட்டு முறையை மாநிலம் முழுவதும் அறிமுகப்படுத்தப்போவதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்தது. தொடர்ந்து, அனைத்து தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்.சி.இ.ஆர்.டி) அனைத்துப் பாடப்புத்தகங்களிலும் கியூஆர் குறியீடுகள் அறிமுகப்படுத்தப்படும் என மத்தியக் கல்வி அமைச்சகமும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details