ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கொம்மலபுடி கிராமத்தில் நேற்று இரவு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி சத்தியநாராயணாவை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கத்தியை கொண்டு தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர்.
நள்ளிரவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவருக்கு கத்திக்குத்து! - விசாகப்பட்டினம்
ஹைதராபாத்: நள்ளிரவில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி. சத்தியநாராயணாவை அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் குத்தி தாக்கியுள்ளனர்.
attack
இந்தத் தாக்குதலில் சத்தியநாராயணவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவருடன் இருந்த இருவர் சிறு காயங்களுடன் தப்பித்தனர். உடனடியாக அப்பகுதி மக்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.