ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்திலுள்ள ஆளுங்கட்சி (ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்) எம்.எல்.ஏ. ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
முன்னதாக எம்.எல்.ஏ. அமெரிக்கா சென்று கடந்த சில நாள்களுக்கு முன்பு வீடு திரும்பினார். இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். இந்நிலையில் அவருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.