தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தல்; ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு - ஜெகன்மோகன் ரெட்டி

அமராவதி: ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

jagan

By

Published : Mar 18, 2019, 10:19 AM IST

நாடு முழுவதும் 17-வது நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. முதற்கட்டமாக ஆந்திரா,அருணாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏப்ரல் 11ஆம் தேதி தேர்தல் நடக்கஇருக்கிறது.

அந்த தேர்தலுடனேயே ஆந்திர மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தலும் நடக்கஇருக்கிறது. ஆட்சியை தக்கவைக்க சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசமும், ஆட்சியைப் பிடிக்க ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியும் தீவிர வியூகங்கள் வகுத்துவருகின்றன.

இந்நிலையில், ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலுக்காக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கடப்பாவில் இருக்கும் புலிவேந்துலா தொகுதியில் போட்டியிடுகிறார்.

சந்திரபாபு நாயுடு போட்டியிட இருக்கும் குப்பம் தொகுதியில் அவரை எதிர்த்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் சந்திரமௌலி என்பவர் போட்டியிடுகிறார். அதேபோல் தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் ரோஜாவுக்கு நகரி தொகுதியில் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details