தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

போக்குவரத்து முடக்கம்: லாரி பின்புறம் பயணித்த இளைஞர்கள் - Youths reach their home through lorry due to lockdown

போக்குவரத்து முடக்கம் காரணமாக பூனேவில் இருந்து கர்நாடகாவுக்கு லாரியின் பின்புறம் இரண்டு இளைஞர்கள் பயணித்துள்ளனர்.

Youths who reach their home through lorry
Youths who reach their home through lorry

By

Published : Mar 26, 2020, 1:34 AM IST

கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடே முடக்கப்பட்டுள்ளது. மேலும் 21 நாள்களுக்கு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து முடக்கம் காரணமாக பல்வேறு மாநிலங்களில் பணிபுரிபவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் சரக்கு லாரியின் பின்புறத்தில் ஏறிக்கொண்டு இரண்டு இளைஞர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அந்த சரக்கு லாரியின் பின் வந்துக்கொண்டிருந்த காரில் இருந்த இளைஞர் ஒருவர் அதை வீடியோ எடுத்துள்ளார்.

லாரி பின்புறம் பயணித்த இளைஞர்கள்

லாரியில் பயணித்து வந்த இளைஞர்கள் மகாராஷ்டிரா மாநில எல்லையில் இருந்து வந்துள்ளனர் என்றும் பூனேவில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவுக்கு அவர்கள் பயணித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க... தமிழ்நாடு - கர்நாடக எல்லைப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தம்

ABOUT THE AUTHOR

...view details