ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் வீட்டிற்கு இன்று (ஜூலை 10) காலை 10.30 மணியளவில் இளைஞர் ஒருவர் தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது. புகாரின் அடிப்படையில் முதல்கட்டமாக அசோக் கெலாட் வீட்டிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது
முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது! - அசோக் கெலாட் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
![முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது! Youth threatens to blow up Rajasthan CM's residence, arrested](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-04:05:06:1594377306-gehlot-2906newsroom-1593403451-274.jpg)
Youth threatens to blow up Rajasthan CM's residence, arrested
அந்த தொலைபேசி எண்ணை காவல் துறை ட்ரேஸ் செய்ததில் ஜம்வரம்கரின் பப்பர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் லோகேஷ் என்பவர் முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, கனோட்டா காவல் துறையினர் அந்த இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.