ஹரியானாவின் ரோடாக் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 20வயது இளைஞர் ஒருவர், 15வயது சிறுமியுடன் இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த சிறுமியின் உறவினர்கள் அந்த இளைஞரை கடத்திச் சென்று, அருகே இருந்து விவசாய நிலத்தில் வைத்து பிரம்பால் சரமாரியாக அடித்துள்ளனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அந்த இளைஞர், சிறிது நேரம் கழிந்து பரிதாமபாக உயிரிழந்தார்.
ஹரியானவில் இளைஞர் அடித்துக் கொலை இதுதொடர்பாக இளைஞரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், சிறுமியின் உறவினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
"சிறுமி, அவரது தந்தை, தாத்தா உள்ளிட்ட உறவினர்கள் மீது வழக்கு பதிந்துள்ளோம்" என காவல் ஆய்வாளர் ஜஸ்வந்த் சிங் கூறினார்.
இதையும் வாசிங்க : தன்பாலின உறவில் ஈடுபட்ட மனைவி - அவமானத்தில் கணவர் தற்கொலை!