புதுச்சேரி வெண்ணிலா நகரைச் சேர்ந்த அரசு செவிலியரான நிவேதிதா தனது மகன் ஸ்டீபன் ராஜூடன் வசித்து வருகிறார். இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டின் பீரோவில் இருந்த 40 சவரன் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் ஸ்டீபன் ராஜின் நண்பரான மிஷேல் சுதன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது மிஷேல் சுதன் நகையை திருடியதை ஒப்புக்கொண்டார். கடந்த மூன்று மாதங்களாக வீட்டின் பீரோவில் இருந்து 40 சவரன் நகைகளை சிறுக சிறுக திருடி நண்பர்கள் கிஷோர், சூர்யா ஆகிய இருவரின் உதவியோடு விற்பனை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.