தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாட்டின் வளர்ச்சியில் நிலையான தடம் பதித்தவர் பிரணாப் - பிரதமர் மோடி புகழாரம் - பிரணாப் இரங்கல் செய்தி

டெல்லி: நாட்டின் வளர்ச்சியில் நிலையான தடம் பதித்தவர் பிரணாப் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

மோடி
மோடி

By

Published : Aug 31, 2020, 8:06 PM IST

டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். அவரின் உடல்நிலை தொடர்ந்து இரண்டு வாரங்களாக மோசமடைந்து வந்த நிலையில், அவருக்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.

பிரணாப்பின் இறப்புக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "பாரத ரத்னா பிரணாப் முகர்ஜி இறப்பு செய்தி கேட்டு இந்தியாவே துயரத்தில் உள்ளது. அவர் நாட்டின் வளர்ச்சியில் நிலையான தடம் பதித்தவர். சிறந்த கல்வியாளர், அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவரான அவரை கட்சி கடந்து அனைத்து தரப்பினரும் போற்றுகின்றனர்.

நீண்ட கால அரசியல் பயணத்தில், நிதித்துறை உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் அவர் ஆற்றிய பங்கு மகத்தானது. சிறப்பான நாடாளுமன்றவாதியான அவரின் தெளிவான பேச்சில் நகைச்சுவை உணர்வு வெளிப்படும். குடியரசுத் தலைவராக பிரணாப் பதவி வகித்தபோது, மக்கள் எளிதாக அணுகக் கூடிய இடமாக ராஷ்டிரபதி பவனை அவர் மாற்றிக் காட்டினார். கல்வி, கண்டுபிடிப்பு, கலாசாரம், அறிவியல், இலக்கியம் ஆகியவற்றின் மையமாக குடியரசு தலைவர் மாளிகை திகழ்ந்தது.

முக்கிய பிரச்னைகளில் அவர் அளித்த ஆலோசனைகளை என்னால் மறந்து விட முடியாது. 2014ஆம் ஆண்டு, நான் டெல்லிக்கு புதிது. முதல் தேதியிலிருந்தே, பிரணாப்பின் வழிகாட்டுதல், ஆதரவு, ஆசீர்வாதம் ஆகியவை எனக்கு கிடைத்தது. அவருடனான உரையாடலை எப்போதும் மகிழ்ச்சியாக நினைவுகூருவேன். குடும்பத்தார், நண்பர்கள், இந்தியா முழுவதும் உள்ள அவரின் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details