20 ஆயிரம் பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு உஜ்கோங்கரின் இந்த வீடு கட்டும் முறை, இந்தியாவின் பிளாஸ்டிக் கழிவுகளின் சிக்கலுக்கு ஒரு தீர்வாக அமையலாம். செங்கற்களையும் சிமென்ட்டுகளையும் கொண்டு வீடுகளைக் கட்டும் முறையை அனைவரும் பார்த்திருப்போம். ஆனால் பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு வீடு கட்டும் முறையை இந்தியாவிலேயே முதன்முறையாக இவர் முயன்றுள்ளார்.
இந்தப் புதுமையான வீட்டை சாண்ட் காட்ஜ் பாபா பகுதியிலுள்ள அமராவதி பல்கலைக்கழகத்திற்கு அருகே இவர் கட்டியுள்ளார். இந்தியாவின் வளர்ந்துவரும் பிளாஸ்டிக் கழிவுகளை நிர்வகிக்க, இந்த முறை ஒரு தீர்வாக இருக்கலாம் என்பதே உஜ்கோங்கரின் கருத்து.
சட்ட மேற்படிப்பை முடித்துள்ள உஜ்கோங்கர், தனது கனவினை அடைய விரும்பியே இந்தக் கட்டுமான துறையில் அடியெடுத்துவைத்தார். கட்டுமான துறையில் புதுமையான முயற்சிகளை முன்னெடுப்பதில் இவருக்குத் தீராத வேட்கை இருந்தது.
தனது இந்த புதிய யோசனை குறித்து நிதின் உஜ்கோங்கர் கூறுகையில், "ஒரு நாள் காலையில் நான் நடந்து சென்றுகொண்டிருந்தபோது சாலையில் கொட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகளைப் பார்த்தபோதுதான், அதிலிருந்து வீடு கட்டும் சிந்தனை எனக்குள் எழுந்தது.