தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒரே நேரத்தில் இரு கைகளாலும் வரைந்து இளம்பெண் சாதனை! - Meghna paint ambidextrously

ஹாசன்: ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும் ஓவியம் வரைந்து இளம்பெண் மேக்னா சாதனைப் புரிந்துள்ளார்.

Woman wins awards for ambidextrous painting skills
மேக்னா

By

Published : Oct 19, 2020, 6:09 PM IST

கர்நாடகா மாநிலத்தில் ஹாசன் மாவட்டத்தில் உள்ள பல்லையா கிராமத்தைச் சேர்ந்தவர் மேக்னா. இவர் தற்போது பார்மசி பயின்றுவருகிறார். இந்த கரோனா காலத்தில் கிடைத்த நேரத்தில் தனது வரையும் திறமையை செழுமைப்படுத்த நினைத்த மேக்னா இரண்டு கைகளால் வரைய முடிவு செய்தார்.

சில நாள்கள் பயிற்சிக்கு பின்னர், 50 வினாடிகளில் ஒரு ஓவியத்தை இருகைகளிலும் வரையக் கற்றுக் கொண்டார். தனது இரண்டு கைகளாலும் அதிவேகமாக வரைந்து ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட் ஆகியவற்றில் இடம் பிடித்து இளம்பெண் மேக்னா சாதனைப் புரிந்துள்ளார்.

பென்சிலில் ஓவியம் வரைவதில் இவர் கைத்தேர்ந்தவர். ஏதேனும் சாதிக்க வேண்டும் என சிறு வயதிலிருந்தே நினைத்தவருக்கு ஓவியம் கைக்கொடுத்தது. கரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வித்தியாசமான ஓவியங்களை வரைந்து லண்டனின் ஒரு ஒரு ஓவியப் போட்டிக்கு அனுப்பினார்.

தவிர, தனது குடும்பத்தினர், நண்பர்கள், பிரபல பாடகர்களின் ஓவியங்களை வரைந்துள்ளார். இந்தியத் தலைவர்கள் அப்துல் கலாம், பிரதமர் நரேந்திர மோடி, பாடகர் எஸ்.பி.பி. ஆகியோரின் உருவப்படங்கள் உள்பட பல பென்சில் ஓவியங்களை அவர் வரைந்துள்ளார்.

இதையும் படிங்க:ஆணி படுக்கையில் யோகாசனம் - 17 வயது சிறுமி சாதனை

ABOUT THE AUTHOR

...view details