தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மருத்துவரிடம் ஆசை வார்த்தை கூறி ரூ.4 லட்சம் சுருட்டிய இளம்பெண் - Odhisa young girl fraud

புவனேஸ்வர்: ஒடிசாவில் ஓய்வுபெற்ற மருத்துவரிடம் ஆசை வார்த்தை கூறி சுமார் நான்கு லட்சம் ரூபாய் மோசடி செய்த இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

Odhisa
Odhisa

By

Published : Aug 8, 2020, 6:31 PM IST

ஒடிசா மாநிலம் அன்கூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ஹோமியோபதி மருத்துவர் பிஜய் பிரதான். இவர் தனது தம்பியுடன் வசித்துவருகிறார். பிரதானின் தம்பி காப்பீட்டு முகவராக பணிபுரிந்துவரும் நிலையில், அண்மையில் அவருக்கு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பணத்தை முதலீடு செய்துள்ளார்.

இந்தச் சூழலில் மருத்துவர் பிரதானிடம் 28 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணான சுப்ரியா தன்னை ஃபைனான்ஸ் கம்பேனி முகவர் என்று கூறி அறிமுகம் செய்துள்ளார். பிரதானிடம் நெருங்கி பழக ஆரம்பித்த அந்த இளம்பெண், அவரது வங்கிக் கணக்கு குறித்த விவரத்தை அறிந்துகொண்டுள்ளார். பின்னர், பிரதானின் காப்பீட்டுத் தொகையைக் காப்பீடு காலம் முடியும் முன்னரே எடுத்துதருவதாகக் கூறி வங்கிக் கணக்கு விவரம், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை வாங்கியுள்ளார்.

மருத்துவரும் ஏமாந்து போய் அனைத்து விவரங்களையும் தர, அவருக்கு தெரியாமலேயே அந்த இளம்பெண் பல தவணைகளாக சுமார் நான்கரை லட்சம் ரூபாயை சுருட்டியுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதைத் தெரிந்துகொண்ட மருத்துவர் அன்கூல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் காவல் துறை விசாரிக்கவே, இந்தப் பெண் தொடர் மோசடியில் ஈடுபட்டு வருபவர் எனவும், ஏற்கனவே, நிர்மல் பேஹ்ரா என்பவரிடமும் ஒரு லட்சம் ரூபாய் அபேஸ் செய்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. தல்சேர் பகுதியில் தலைமறைவாக இருந்த அப்பெண்ணை காவல் துறையினர் கைது செய்து, விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:'அலைபேசியும் இல்ல, நெட்வொர்க்கும் இல்ல' - பழங்குடியின குழந்தைகளுக்கு எட்டாக் கனியாகும் ஆன்லைன் கல்வி!

ABOUT THE AUTHOR

...view details