தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உ.பி.யில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை - பிரியங்கா காந்தி - சட்ட ஒழுங்கு

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சட்ட ஒழுங்கு சரியாக இல்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா சாடியுள்ளார்.

உபியில் சட்ட ஒழுங்கு சரியாக இல்லை -யோகியை சாடிய பிரியங்கா காந்தி...!
உபியில் சட்ட ஒழுங்கு சரியாக இல்லை -யோகியை சாடிய பிரியங்கா காந்தி...!

By

Published : Sep 29, 2020, 11:44 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் கடந்த 14ஆம் தேதியன்று, பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் தனது தாயுடன் விவசாயத் தோட்டத்தில் புல் வெட்டிக் கொண்டிருந்தபோது நான்கு ஆண்கள் சேர்ந்து கடத்தி, கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

இதனால் பலத்த காயமடைந்த அந்த இளம்பெண், அலிகாராவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர். இதனையடுத்து, பலத்த காயம் ஏற்பட்டதால், அந்தப் பெண் மேல்சிகிச்சைக்காக அலிகாராவிலிருந்து டெல்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் இன்று (செப். 29) அந்தப் பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து உத்தரப் பிரதேச அரசை சாடி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா ட்வீட் செய்துள்ளார். அதில், “ஹத்ராஸ் கொடுமையால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த பட்டியலின பெண் இன்று உயிரிழந்தார். இரண்டு வாரங்களாக இறப்புக்கும் வாழ்க்கைக்கும் இடையில் போராடிவந்த அவர், உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உபியில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை. பெண்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. குற்றவாளிகள் வெளிப்படையாகவே குற்றங்களைச் செய்து சுதந்திரமாகச் சுற்றித்திரிகின்றனர். அதனால் அந்த இளம்பெண் போன்று பல பெண்களைக் கொன்றவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...வதோதராவில் மூன்று மாடி கட்டடம் இடிந்து விபத்து - 3 பேர் பலி

ABOUT THE AUTHOR

...view details