பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சருமான மாயாவதியின் தலைமையிலான (2007 - 2012) அரசில் நடைபெற்ற ஊழல்கள், முறைகேடுகள் குறித்து சி.ஏ.ஜி (கட்டுப்பாட்டாளர் மற்றும் கணக்காளர் இயக்குநரகம்) விசாரணை மேற்கொண்டு அம்மாநில அரசுக்கு தற்போது அறிக்கை ஒன்றை அளித்துள்ளது.
சிஏஜி அறிக்கையை வைத்து மாயாவதிக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் யோகி அரசு! - சி.ஏ.ஜி அறிக்கை
லக்னோ : பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தலைமையிலான உத்தரப் பிரதேச அரசில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசு முடிவு செய்துள்ளது.
![சிஏஜி அறிக்கையை வைத்து மாயாவதிக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் யோகி அரசு! சி.ஏ.ஜி அறிக்கையை வைத்து மாயாவதிக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கும் யோகி அரசு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-05:35:42:1599653142-qqqqqqqq-0909newsroom-1599648188-479.jpg)
சிஏஜி அறிக்கையின் அடிப்படையில் மாயாவதி மீது நடவடிக்கை எடுக்க உத்தரப் பிரதேசத்தை தற்போது ஆட்சி செய்துவரும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 2007 மற்றும் 2012க்கு இடையில் மாயாவதி தலைமையிலான உத்தரப் பிரதேச அரசின் ஆட்சியின் போது ஏற்பட்ட முரண்பாடுகளை இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
இது குறித்து அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "அப்போதைய மாயாவதி அரசாங்கம் காஸியாபாத்தில் நில பயன்பாட்டை விவசாய நிலங்களை வீட்டுவசதி வாரியத்தின் கீழ் கொண்டுவந்து வீடு கட்டித்தரும் திட்டத்தை முன்னெடுத்தது. அந்த திட்டத்தின் காரணமாக காஸியாபாத் மேம்பாட்டு ஆணையத்திற்கு ரூ. 572.48 கோடி நிதி இழப்பை ஏற்பட்டுள்ளதாக சிஏஜி விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றார்.