தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட விபத்திற்கு காங்கிரஸ் தான் காரணம்' - யோகி ஆதித்யநாத்!

லக்னோ: ஆரையாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட லாரி விபத்திற்கு ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் தான் காரணம் என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

By

Published : May 18, 2020, 4:45 PM IST

உத்தரப்பிரதேசத்தில் 26 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சென்ற லாரி விபத்துக்குள்ளானது. அந்த விபத்திற்கு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தான் காரணம் என்று ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களைச் சார்ந்த காங்கிரஸ் அரசு குற்றஞ்சாட்டியது.

இது குறித்து உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது, 'உத்தரப் பிரதேசத்தின் ஆரையாவில் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற லாரி விபத்துக்குள்ளானது. அந்த லாரிகள் ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்தது என்பதை காங்கிரஸ் தலைமைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும், பிகார், ஜார்க்கண்டிற்குச் சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து லாரி ஓட்டுநர்கள் பணம் வாங்கியுள்ளனர். இச்சம்பவத்திற்கு அம்மாநிலங்களின் அரசு தான் காரணம், அப்போது காங்கிரஸ் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? நீங்கள் மக்களைச் சுரண்டுவீர்கள், பின்னர் நேர்மையான முகத்தை வைத்துக்கொள்வீர்கள்' எனக் காட்டம் தெரிவித்தார்.

மேலும், பேசிய அவர், ' ‘100 எலிகளை உட்கொண்ட பூனை, பிறகு ரட்சிப்பைத் தேடும்’ என்ற பழமொழி இன்று காங்கிரஸுக்குப் பொருந்துகிறது. இது காங்கிரஸின் வெட்கக்கேடான செயல். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறப்பைக் கேலி செய்ததற்காக காங்கிரஸ் தலைமையை நான் கண்டிக்கிறேன்' என்றார்.

இதையும் படிங்க: சொந்த ஊர் திரும்புகையில் விபரீதம்: லாரி கவிழ்ந்ததில் பெண் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details